மற்றுமொரு புதிய திட்டத்திற்காக பாரிய அளவில் முதலிடும் கூகுள்

Loading...

மற்றுமொரு புதிய திட்டத்திற்காக பாரிய அளவில் முதலிடும் கூகுள்கூகுள் நிறுவனம் உலகெங்கிலும் முதற்தர இணைய சேவையை வழங்கி வருகின்றதுடன், மேலும் பல்வேறு துறைகளில் காலடி பதித்து தொழில்நுட்ப உலகில் வீறுநடைபோடுகின்றது.
இந்நிலையில் Mobovi நிறுவனத்தில் 60 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் கூகுள் நிறுவனமானது சீனாவில் தனது Android Wear சாதனங்ககளை விற்பனை செய்வதற்கான அடித்தளத்தினை Mobovi நிறுவனமே அமைத்துக் கொடுத்திருந்தது.

இவ்வாறான நிலையிலேயே அந்த நிறுவனத்துடன் இப் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை Mobovi நிறுவனத்தை உருவாக்கியவர்கள் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய Zhifei Li மற்றும் Mike Lei ஆகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply