மனிதனை ஒத்த உயிரினத்தின் படிமங்கள் கண்டுபிடிப்பு

Loading...

மனிதனை ஒத்த உயிரினத்தின் படிமங்கள் கண்டுபிடிப்புமனிதனை ஒத்த உயிரினத்தின் தொல்படிமங்கள் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகருக்கு அருகில் உள்ள குகையில், விட்வடர்ஸ்ரேண்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியரும் அமெரிக்காவைச் சேர்ந்த படிமமானுடவியலாளரான (paleoanthropologist) லீ பெர்கர், என்பவரது தலைமையில் 60 ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் புதைக்கப்படுவதற்கான இடமாக இருந்திருக்கக்கூடிய ஆழமான நிலவறை ஒன்றில் இருந்து பதினைந்து உடற்பாக எலும்புகளின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மேலும் 1,550 படிம உறுப்புகளும் கிடைத்துள்ளது. உலகில் இதுவரையிலான அகழ்வாய்வில் கிடைத்ததிலேயே, இதுதான் மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது.

மனித பரிணாம வளர்ச்சியில் இது மிகவும் முக்கியமாக கண்டுபிடிப்பு என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செஸோதோ மொழியில் இந்த இனத்திற்கு நலெடி(நட்சத்திரம்) என்று பெயர். சுமார் 3 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த, மனித இனத்தின் மூதாதையர்களில் ஒன்று இந்த இனம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Loading...
Rates : 0
VTST BN