மட்டன் சாப்ஸ்

Loading...

மட்டன் சாப்ஸ்மட்டன் சாப்ஸ் – ஒரு கிலோ
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 6 பற்கள்
இஞ்சி – 2 அங்குலத் துண்டு
பட்டை – அரை அங்குலத்திற்கு
மிளகு – 6
கரம் மசாலா – 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வினிகர் – 1 மேசைக்கரண்டி
தயிர் – 50 கிராம்
நெய் – 125 கிராம்
முட்டை – 1
ரொட்டித்தூள் – தேவையான அளவு

வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, பட்டை ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதில் கரம் மசாலா, உப்பு, மிளகாய்த் தூள், தயிர், வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதில் சாப்ஸ் துண்டுகளைப் போட்டு கிளறி ஒரு மணி நேரம் நன்கு ஊறவிடவும்.
பின்னர் இறைச்சியை வினிகர் இல்லாமல் வடித்தெடுத்துக் கொள்ளவும்.
முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து, அதை நன்கு அடித்து கலக்கி, ஊற வைத்துள்ள இறைச்சி துண்டுகளை இதில் முக்கி எடுத்து ரொட்டித்தூளின் மேல் புரட்டிக்கொள்ளவும்.
தோசைக்கல்லில் இரண்டு கரண்டி நெய் விட்டு இறைச்சித் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply