மட்டன் கட்லெட்

Loading...

மட்டன் கட்லெட்கொத்துக்கறி – ஒரு கிலோ
நெய் – 200 கிராம்
கரம் மசாலா – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
சுக்கு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
ரொட்டித் தூள் – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 2
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
இஞ்சி – 2 அங்குலத்துண்டு ஒன்று
கொத்துமல்லி – ஒரு கட்டு
உருளைக்கிழங்கு – 15

வாணலியில் 50 கிராம் நெய் விட்டுக் காய்ந்ததும் உருளைக்கிழங்கு, ரொட்டித் தூள் தவிர மற்ற எல்லா பொருள்களையும் வாணலியில் போட்டு வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் விட்டு இறைச்சியை வேகவைத்து இறக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துச், சிறிதளவு உப்பு மிளகாய் தூள் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
இதை சிறுசிறு உருண்டைகளாக்கி, தட்டி கொத்துக்கறி கலவையை வைத்து இடைவெளி விடாமல் மூடி, ரொட்டித் தூளில் புரட்டி எடுக்கவும்.
வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் கட்லெட்டை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN