மசால் வடை 2

Loading...

மசால் வடைகடலை பருப்பு – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 6
இஞ்சி – அரை அங்குல துண்டு
சோம்புத் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
உப்பு – அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – ஒன்றரை கப்

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

அதன் பின்னர் ஊற வைத்த கடலை பருப்பை தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் உப்பு, சோம்பு தூள் சேர்த்து ஒன்றிரண்டாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் இருந்து கொரகொரப்பாக அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை போடவும்.

எல்லாவற்றையும் சேர்த்தப் நன்கு ஒன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எலுமிச்சை பழ அளவு மாவை எடுத்து வட்டமாக கையில் அல்லது வாழை இலையில் தட்டி எண்ணெயில் போடவும். கையில் ஒட்டாமல் இருக்க தண்ணீர் தொட்டுக் கொள்ளவும்.

2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு 3 நிமிடம் கழித்து எண்ணெய் அடங்கியதும் பொன்னிறமாக எடுக்கவும்.

சுவையான மசால் வடை ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply