ப்ரெட் சாண்விட்ச்

Loading...

ப்ரெட் சாண்விட்ச்ப்ரெட் – 4
வெங்காயம் – ஒன்று
குடைமிளகாய் – பாதி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – கால் கப்
உப்பு – கால் தேக்கரண்டி
வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் – பாதி

வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லித்தழைகளை ஆய்ந்து அலசி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, மிளகுத்தூள், மற்றும் உப்பு சேர்த்து ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.

ஒரு ப்ரெட்டை எடுத்து அதில் இரண்டு பக்கமும் வெண்ணெயை தடவிக் கொள்ளவும். இதுப் போல் மற்றொரு ப்ரெட்டிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.

வெண்ணெய் தடவிய ப்ரெட்டில் செய்து வைத்திருக்கும் குடைமிளகாய் கலவையை வைக்கவும்.

குடைமிளகாய் கலவை வைத்தப் ப்ரெட்டில் மற்றொரு ப்ரெட்டை வைத்து மூடவும்.

பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் இந்த ப்ரெட் சாண்விச்சை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும்.

ஈஸி ப்ரெட் சாண்விட்ச் ரெடி.

இந்த ப்ரெட் சாண்விச்சை முக்கோணவடிவில் நறுக்கி தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply