பொடுகு நீங்க…

Loading...

பொடுகு நீங்க...விளக்கெண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். பால், மிளகு, வெந்தயம், வேப்பிலை அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். துளசி இலையை அரைத்து தலைக்கு தேய்த்தால் பொடுகு நீங்கும். எலுமிச்சைச் சாற்றை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் பொடுகு நீங்கும். ஒருவர் உபயோகித்த சீப்பை அடுத்தவர் உபயோகிக்கக் கூடாது.

3 தேக்கரண்டி கடலைமாவு, 3 தேக்கரண்டி சீகைக்காய் பொடி, 1 தேக்கரண்டி ஊற வைத்த வெந்தயம் இவற்றை சோறு வடித்த கஞ்சியில் கலந்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு 2 முறைகள் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து 10 நிமிடம் ஊறியபின், மேற்கூறிய கஞ்சியைத் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் செய்து வந்தால் ஒரு மாதத்தில் பொடுகு நீங்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply