பேஸ்புக்கில் “டிஸ்லைக்”கிற்கு பதிலாக புத்தம் புதிய வசதி!

Loading...

பேஸ்புக்கில் “டிஸ்லைக்”கிற்கு பதிலாக புத்தம் புதிய வசதி!சமூக வலைத்தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக், டிஸ்லைக் பட்டனுக்கு பதிலாக ஆறு உணர்வுகளை வெளிப்படுத்தும் ஸ்மைலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் தேவை குறித்து நாளுக்கு நாள் விவாதங்கள் எழுந்த நிலையில், முதல் படியாக லைக் பட்டனுடன் ஆறு உணர்வுகளை வெளிப்படுத்தும் ஸ்மைலிகளை அறிமுகம் செய்துள்ளது.

அதன் படி அன்பு, ஹாஹா, யாஹ், வாவ், சோகம் மற்றும் கோபம் உட்பட ஆறு வகையான பாப் அப் பட்டன்களின் ஒன்றை பயனாளர்கள் தங்களது லைக்குடன் கிளிக் செய்து உணர்வுகளை பகிரலாம்.

முதற்கட்டமாக அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அந்த நாடுகளின் பயனாளர்களிடம் அனுபவத்தை கேட்டறிந்த பின்னர், உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply