பேன்களை ஒழிக்க…

Loading...

பேன்களை ஒழிக்க...சீதாப்பழக் கொட்டைகளைக் காய வைத்து, தூளாக்கிக் கொள்ள வேண்டும். இத்துடன் நல்லெண்ணெயைக் கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யைத் தலைக்குத் தேய்த்தால் பேன்கள் நீங்கி விடும்.

துளசி இலைகளை தலையணையின் மேல் போட்டு அதன் மேல் துணி விரித்துப் படுத்தால் பேன்கள் நீங்கி விடும்.

வெங்காயத்தை அரைத்து தலைக்குத் தேய்த்தால் பேன்கள் நீங்கி விடும்.

பேன் தொல்லையை போக்க எளிய வழிகள்!

பேன் தொல்லை, குறிப்பாய் பள்ளிக் குழந்தைகளை ரொம்பவே பாதிக்கும் ஒரு பிரச்சினை. கெமிக்கல் ஷாம்புகள் எத்தனையோ இருக்கின்றன. இவை எவ்வளவு தூரம் பயன்தருகின்றன என்று கேள்விக்குறியாக நினைப்பவர்கள், இந்த இயற்கை முறையை கையாளலாம்.

துளசியையும், வேப்பிலையையும் சம அளவில் எடுத்து பொடி செய்து, தலைக்கு குளிக்கும் அன்று எண்ணெய்யில் கலந்து நன்கு மண்டையில் தடவி மசாஜ் செய்து பின் குளிக்கவும். பேனின் அளவைப் பொறுத்து வாரம் ஒரு முறையோ இரு முறையோ இப்படி குளித்து வர பேன் போயே போச்சு.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply