பெரிய வெங்காய சட்னி

Loading...

பெரிய வெங்காய சட்னிபெரிய வெங்காயம் – ஒன்று
கடலைப் பருப்பு – அரை மேசைக்கரண்டி
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் – குண்டு மணி அளவு
தனியா – அரை மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் – 2
உப்பு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டை போட்டு பொரித்து அதில் கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் போட்டு 2 நிமிடம் வறுத்து எடுக்கவும்.

பிறகு அதில் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஆறியதும் மிக்ஸியில் வதக்கியவற்றை போட்டு புளி, உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும்.

சுவையான பெரியவெங்காய சட்னி தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply