பூரிப் பாயசம்

Loading...

பூரிப் பாயசம்மைதா மாவு – ஒரு கப்
ரவை – 50 கிராம்
நெய் – 2 தேக்கரண்டி
சர்க்கரை – 1 1/2 கப்
பால் – 3/4 லிட்டர்
ஏலக்காய்ப் பொடி – அரை தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு – 20 கிராம்
உப்புத் தூள் – 2 சிட்டிகை
எண்ணெய் – பொரிப்பதற்கு

ஒரு பாத்திரத்தில் மைதா மாவையும், ரவையையும், சேர்த்து நெய், உப்புத் தூள் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
உருண்டைகளை அப்பளமாகபோட்டு கொண்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றி பூரிகளாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.
அடி கனமானப் பாத்திரத்தில் பால் ஊற்றிக் கொதிக்க வைத்து கிளறியபடியே இருக்கவும்.
பால் காய்ந்ததும் இறக்கி சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய்ப் பொடி சேர்த்து கிளறவும்.
பொரித்து வைத்திருக்கும் பூரிகளைப் பொடிப்பொடியாக நொறுக்கி போட்டு நன்கு கலந்து மூடி வைத்து சிறிது நேரம் கழித்து சூடாகப் பரிமாறவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply