புல்கா ரொட்டி

Loading...

புல்கா ரொட்டிகோதுமைமாவு – ஒரு கப்
உப்பு – 2 தேக்கரண்டி
சீனி – ஒரு தேக்கரண்டி

கோதுமை மாவுடன் உப்பு மற்றும் சீனி சேர்த்து, நீர் விட்டு சற்று இளக்கமாக பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவினை ஒரு ஈரத்துணிக்க் கொண்டு மூடி வைக்கவும். இல்லையெனில் வெறும் பாத்திரத்திலும் மூடி வைக்கலாம்.
சுமார் அரை மணி நேரம் சென்ற பிறகு எடுத்து, மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும்.
மாவு மிகவும் நீர்த்து இருப்பின் வெறும் மாவில் தேய்த்து சப்பாத்திகளாக இடவும். மிகவும் மெல்லியதாக தேய்த்தல் அவசியம்.
ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சப்பாத்தியைப் போட்டு, லேசாக காய்ந்ததும் ஒரு கிடுக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாக காட்டி வேகவிடவும்.
சப்பாத்தி வெந்து பூரி போல் எழும்பி வரும். இதே போல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
சப்பாத்தி கருகாத அளவிற்குப் பார்த்துக் கொள்ளவும். எண்ணெய் இல்லாமல் இப்படி செய்யப்படும் சப்பாத்தியே புல்கா ரொட்டி ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply