புதிய வடிவமைப்பில் Google Play Store

Loading...

புதிய வடிவமைப்பில் Google Play Storeகூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கும் வசதியினை Google Play Store தளத்தின் ஊடாக பயனர்களுக்கு வழங்கிவருகின்றது.

இந்நிலையில் இத்தளத்தின் வடிவமைப்பினை தற்போது உள்ள நிலையில் இருந்து முற்றிலும் மாற்றியமைத்து அறிமுகம் செய்ய அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதனை அந்நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பொறியியலாளரான Kirill Grouchnikov என்பவர் தனது கூகுள் பிளஸ் சமூகவலைத்தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் Android 6.0 Marshmallow எனும் தனது புதிய இயங்குதளத்தினை வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ள நிலையிலேயே கூகுள் நிறுவனம் இந்த அதிரடி மாற்றத்தினையும் விரைவில் கொண்டுவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply