புதிய வகை சிலந்தி அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

Loading...

புதிய வகை சிலந்தி அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்புஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுவரை அறியப்படாத புதிய வகை சிலந்தி ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.
5 சென்ரி மீற்றர்கள் நீளமுடையதும், அழகிய வர்ணத்தினைக் கொண்டதுமான சிலந்தி நியூ சவுத்வேல்ஸ் பகுதியிலுள்ள Tallaganda மாநிலப் பகுதிக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலந்தியானது Atrax sutherlandi எனும் இனத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ள குறித்த ஆராய்ச்சியாளர்கள், இதனை உறுதிப்படுத்துவதற்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவ் வகை சிலந்திகள் ஏறத்தாழ 25 தொடக்கம் 30 வருடங்கள் வரையான காலப் பகுதிக்குள் தோற்றம் பெற்றிருக்கலாம் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply