புடலங்காய் வடை

Loading...

புடலங்காய் வடைபுடலங்காய் – ஒன்று
பச்சை மிளகாய் – 6
பெரிய பூண்டு – ஒன்று
கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
இலவங்க பட்டை – சிறிது
இஞ்சி – 100 கிராம்
பொட்டுக் கடலை – 2 ஆழாக்கு
வெங்காயம் – 150 கிராம்
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – அரை லிட்டர்
டால்டா – 5 தேக்கரண்டி

புடலங்காயை விதை நீக்கி விட்டு பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாய், இலவங்க பட்டை, இஞ்சி, பூண்டு, கல் உப்பு இவைகளை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பொட்டுக் கடலையை தனியாக மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
டால்டாவை வாணலியில் இட்டு இதில் வெங்காயம், புடலங்காய் இவைகளை போட்டு வதக்கவும்.
பிறகு இதனை பொட்டுக் கடலை விழுதோடு சேர்த்து பிசைந்து, மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் விட்டு வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து பிசைய வேண்டும்.
மாவு வடை சுடும் பதத்திற்கு வந்ததும் வடைகளை தட்டி எண்ணெயில் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply