புடலங்காய் கறி

Loading...

புடலங்காய் கறிபுடலங்காய் – ஒன்று
வெள்ளை உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – ஒன்று
உப்பு – ஒரு தேக்கரண்டி
சீனி – ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – ஒன்றரை மேசைக்கரண்டி

புடலங்காயை இரண்டாக வகுந்து சிறு சிறு துண்டுகளாக பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

அதில் நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை தண்ணீரில் அலசி விட்டு போட்டு பிரட்டி விடவும்.

மேலே 2 மேசைக்கரண்டி தண்ணீரை தெளித்து 10 நிமிடம் மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து திறந்து உப்பு போட்டு பிரட்டி விடவும்.

அதன் பின்னர் தேங்காய் துருவல், சீனி போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி விடவும்.

சுவையான புடலங்காய் கறி தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply