பீர்க்கங்காய்த் துவையல்

Loading...

பீர்க்கங்காய்த் துவையல்பீர்க்கங்காய் – 2
உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகாய்வற்றல் – 2
புளி – ஒரு கொட்டைப்பாக்கு அளவு
பெருங்காயம் – சிறுதுண்டு
உப்பு – கால் தேக்கரண்டி

பீர்க்கங்காயை அடுப்பில் காட்டி சுட்டு, தோலை உரித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய்வற்றல், பெருங்காயம் போட்டு வறுக்கவும்.
மிக்ஸியில் வறுத்தவற்றை போட்டு அதனுடன் புளி, மிளகாய், உப்பு வைத்துச் சிறிது அரைத்த பிறகு பீர்க்கங்காயையும் வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் சுடுவதற்கு பதிலாக குக்கர் வைக்கும்போது அதன் மேலே ஒரு மூடியில் வைத்து எடுத்தும் தோல் உரிக்கலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply