பீட்ரூட் ஹேர் பேக்

Loading...

பீட்ரூட் ஹேர் பேக்தலையை குளுமையாக்கி முடி வளர்ச்சியைத் தூண்டச் செய்கிற பீட்ரூட்டின் `ஆஹா’ ஹேர் `பேக்’ இது.

அதிமதுரம் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்),
வெந்தயப் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்…

இந்த இரண்டையும் விழுதாக்கும் அளவுக்கு பீட்ரூட் சாறைக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை தலையின் முன் பகுதியிலிருந்து தலை முழுவதும் தடவி, நன்றாக மசாஜ் செய்து, பிறகு குளியுங்கள். வெந்தயப் பவுடர் உடலைக் குளுமை ஆக்கும்.

அதிமதுரம் முடி வளர்ச்சியை தூண்டும். பீட்ரூட் கூந்தலுக்கு மினுமினுப்பையும் மிருதுத் தன்மையையும் கொடுக்கும்.

`பொடுகுத் தொல்லை தீரவே இல்லை’ என்று சோக ராகம் பாடுகிறவர்களா நீங்கள்?

2 டீஸ்பூன் விளக்கெண்ணையை எடுத்து, கொதிக்கிற தண்ணீர் இருக்கிற பாத்திரத்தினுள் வைத்து, மிதமான சூட்டில் எடுத்து விடுங்கள். இதனுடன் 2 டீஸ்பூன் பீட்ரூட் சாறு சேர்த்து, இது பேஸ்ட் ஆகும் அளவுக்கு வெந்தயப் பவுடரைச் சேருங்கள்.

இந்த விழுதை தலை முழுவதும் தேய்த்து அலசுங்கள். கடைசி `மக்’ தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் விட்டுக் கொள்ளுங்கள். வாரம் இருமுறை இதேபோல், குளித்து வர, பொடுகு மறைவதுடன் பளபளப்பும் கூடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply