பில்ல குடுமு

Loading...

பில்ல குடுமுஉடைத்த பச்சரிசி – கால் படி
பயத்தம்பருப்பு – 100 மில்லி
கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – ஒன்று
அரிசிமாவு – 100 மில்லி
வெல்லம் – 200 கிராம்
முந்திரி – 4
கசகசா – ஒரு தேக்கரண்டி

முதலில் பயத்தம்பருப்பை குழையாமல் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடலைப்பருப்பினை ஊற வைத்துக் கொள்ளவும். தேங்காயில் அரை மூடியினைத் துருவிக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியில் முக்கால் லிட்டர் தண்ணீர் வைத்து தேவையான உப்பு போட்டு கொதிக்க வேண்டும்.
கொதிக்கும் போது ரவையாக உடைத்த பச்சரிசியைக் கொட்டி மூடி வைக்க வேண்டும்.
5 நிமிடம் கழித்து இறக்கி, ஊற வைத்த கடலைப்பருப்பு, வேகவைத்த பயத்தம்பருப்பு துருவிய தேங்காய் அனைத்தும் போட்டு நன்கு கிளற வேண்டும்.
பின் கை பொறுக்கும் சூட்டில் சிறுசிறு வடை போல் தட்டி இட்லி தட்டில் வைத்து இட்லி போல் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இதற்கு தொட்டுக்கொள்ள கீழ்கண்டவாறு பாயசம் செய்து கொள்ளவும்.
அடுப்பில் 100 மில்லி தண்ணீர் வைத்து 2 சிட்டிகை உப்பு போட்டு தண்ணீர் கொதிக்கும் போது அரிசி மாவினைக் கொட்டி கிளற வேண்டும்.
கொழுக்கட்டை மாவுபோல் கிளறி இறக்கி தேன்குழல் அச்சில் போட்டு ஒரு தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
தீடீர் இடியாப்ப மாவு அல்லது கொழுக்கட்டை மாவு இருந்தாலும் பயன்படுத்தலாம்.
மீதமுள்ள அரை மூடித் தேங்காயில் கால் மூடியைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
பின் மிக்ஸியில் தேங்காய், கசகசா இரண்டும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் போட்டு கரைந்ததும் கல், மண் இல்லாமல் வடிகட்டிக் கொதிக்கவிடவும்.
அந்த நீர் கொதிக்கும் போது அரைத்த தேங்காய், கசகசா விழுதை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து இந்த வெல்லப்பாகில் ஊற்றவும்.
பின் வேக வைத்த குழல்களை எடுத்து இந்த வெல்லம் விழுது கரைசலில் போட்டு, 10 நிமிடம் கழித்து இறக்கி முந்திரி தாளித்து கொட்டவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply