பிரட் வெஜிடபிள் மசாலா உப்புமா

Loading...

பிரட் வெஜிடபிள் மசாலா உப்புமாரொட்டி – 25 துண்டுகள்
எண்ணெய் – 50 கிராம்
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு – 15
வெங்காயம் – 3
மிளகாய் வற்றல் – 3
கிராம்பு – 3
இஞ்சி – கொஞ்சம்
கறிவேப்பிலை – கொஞ்சம்
பிரிஞ்சி இலை – கொஞ்சம்
ஏலக்காய் – 2
லவங்கப்பட்டை – 2

ரொட்டித் துண்டுகளைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ரொட்டியின் ஓரத்தை நீக்கி விட்டு அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொஞ்சமாக நீர் சேர்த்துப் பிசையவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி முந்திரிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு அரிந்த வெங்காயம், மிளகாய் வற்றல், இஞ்சி, கறிவேப்பிலை முதலானவற்றையும் மற்ற பொருட்களையும் அவற்றுடன் சேர்த்துப் போதுமான அளவு வதக்கிக் கொள்ள வேண்டும்.
ரொட்டித் துண்டுகளை உதிர்த்து போட்டுக் கிளறி விட்டு பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு வாசனை மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.
ஐந்து நிமிடங்களில் பிரட் வெஜிடபிள் மசாலா உப்புமா தயாராகி விடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply