பாதாம் அல்வா

Loading...

பாதாம் அல்வாபாதாம் பருப்பு – 1 1/2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 400 கிராம்
குங்குமப்பூ – 1 கிராம்
ஏலக்காய் – 5 கிராம்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் 2 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து, அவற்றின் தோல் உரித்து நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.
அலசிய பாதாம் பருப்புகளை நூறு மி.லி. தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து பாதாம் பருப்பு விழுது, சர்க்கரையைப் போட்டு நன்றாக உருட்டும் பதம் வரும்வரை கிளற வேண்டும்.
பின்பு வாணலியை கீழே இறக்கி, பாதாம் பருப்பு, சர்க்கரை கலவையில் நெய் விட்டுக் கிளற வேண்டும்.
அடுப்பில் வைத்து நெய் ஊற்றினால் அல்வாவின் நிறம் மாறிவிடும் என்பதால் இறக்கி வைத்து நெய் ஊற்றவும்.
கலவை பாத்திரத்தில் ஒட்டாதவாறு கிளறவும். பின்பு ஏலப்பொடி, குங்குமப்பூ போடவேண்டும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply