பல நோய்களுக்கு ஒரு தீர்வு – துரியன் பழம் !!

Loading...

பல நோய்களுக்கு ஒரு தீர்வு - துரியன் பழம் !!தற்போது துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடைய துரியன் பழம் மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது. இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இதிலும் பழங்கள் ம்டுமின்றி இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. அதே சமயம் சில நேரங்களில் இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்கள் ஏற்கடும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது.
உண்டையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் துரியம் பழம் சாப்பிடுவதால், உடலில் இரத்த அழுத்தம் மற்றும் கொரஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதால் தான் அவ்வாறு கூறுகின்றனர். இருப்பினும் போதிய அளவு துரியன் பழத்தை சாப்பிட்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
ஏனெனில் துரியன் பழத்தின் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் வாழைப்பழத்தை விட 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. சரி, இப்போது தூயன் பழத்தால் உடலுக்கு கிடைக்கும் சில நன்மைகளைப் பார்ப்போம்.
மஞ்சள் காமாலை:
துரியன் பழத்தின் சதைப் பகுதியை சாப்பிட்டால், மஞசள் காமாலை நோயை குணப்படுத்தலாம்.
நகங்களில் நோய்த்தொற்று:
நகங்களில் பிரச்சனை இருக்கும் போது துரியன் பழத்தின் வேர்களைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
நீரழிவு:
துரியன் பழத்தின் மாங்கனீசு அதிகம் இருப்பதால் அதனைச் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.
காய்ச்சல்:
துரியன் மரத்தின் வேர் மற்றும் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் காய்ச்சலில் இருந்து குணம் பெறலாம்.
ஆரோக்கியமான மூட்டுகள்:
துரியன் பழத்தின் உள்ள வைட்டமின்கள் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
கொசுக்கடி:
துரியன் பழத்தின் தோல், கொசுக்கடியைத் தடுக்க உதவும்.
இரத்த சோகை:
துரியன் பழத்தின் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால் இதனைச் சாப்பிட இரத்த சோகையை குணமாகும்.
முதுமை தோற்றம்:
இளமையிலேயே முதுமை தோற்றத்தில் காணப்படுபவர்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அரில் உள்ள வைட்டமின் சி சத்தால் முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம்.
மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம்:
மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுன் துரியன் பழம் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் ஃபைரிடாக்ஸின் என்னும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது.
தைராய்டு:
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.
குறைந்த இரத்த அழுத்தம்:
இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தமானது அதிகரிக்கும்
ஒற்றை தலைவலி:
ஒற்றைத் தலைவலியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, துரியன் பழம் ஒரு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். ஏனெனில் இதில் ஒற்றைத் தலைவலியப் போக்கும் ரிபோஃப்ளேவின் அதிகம் நிறைந்துள்ளது.
பல் பிரச்சனைகள்:
துரியன் பழத்தின் பாஸ்பரஸ் அதிகம் நிறைந்திருப்பதால், அதனைச் சாப்பிட பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
மலச்சிக்கல்:
துரியன் பழத்தின் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தலாம்.
பலவீனமான கருப்பை:
பொதுவாக கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்க முடியாது ஒருவேளை கருத்தரித்தாலும், சில நாட்களில் கலைந்துவிடும். எனவே இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், கருப்பை பலமாகி, ஆரோக்கியமாக ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
விந்தணு குறைபாடு:
ஆண்கள் துரியன் பழத்தை சாப்பிட்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பசியின்மை:
பசியின்மை பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள தயமின் மற்றும் நியாசின் பசியைத் தூண்டும்.
சொறி சிரங்கு:
சொறி சிரங்கு பிரச்சனை இருந்தால், துரியன் பழத்தின் தோலை அரைத்து தடவினால் குணமாகும்

Loading...
Rates : 0
VTST BN