பலாப்பழ அல்வா

Loading...

பலாப்பழ அல்வாபலாச்சுளை – 25
வெல்லம் – கால் கிலோ
தேங்காய் – 1 மூடி
நெய் – 3/4 கப்
முந்திரி – 25 கிராம்

நன்கு பழுத்த பலாச்சுளைகளை எடுத்து கொட்டைகள நீக்கி, சிறு சிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் விட்டு இந்த சுளைகளைப் போட்டு வேகவைக்க வேண்டும்
பலாச்சுளைகள் வெந்தபின்பு கீழே இறக்கி ஒரு மிக்ஸியில் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
வெல்லத்தை பொடித்து அரை கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்த்து, வெல்லம் கரைந்தவுடன் ஒரு துணியில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
கெட்டியான வெல்லப்பாகுடன் அரைத்து வைத்துள்ள பலாச்சுளையும், தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி, ஏலப்பொடி தூவி, முந்திரிப்பருப்பையும் வறுத்துப் போடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply