பலாப்பழப் பிரதமன்

Loading...

பலாப்பழப் பிரதமன்பலாப்பழச் சுளை – 10
தேங்காய் – ஒன்று
வெல்லம் – கால் கிலோ
சுக்குப் பொடி – அரை தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி – அரை தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
வறுத்த முந்திரிப் பருப்பு – 10 கிராம்
துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி

பலாச்சுளையை பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேங்காயைத் துருவி சூடான தண்ணீரை ஊற்றி அரைத்து கெட்டிப்பால் எடுத்து, பிறகு தேங்காய்ச் சக்கையில் தண்ணீர் ஊற்றி அரைத்து இரண்டு முறை பாலை எடுத்து தனித்தனியாக வைக்கவும்.
வாணலியில் தேங்காய்த் துருவலைப் போட்டு வதக்கி எடுத்து விட்டு அதில் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பு துண்டுகளை வறுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீதி நெய்யை ஊற்றி பலாச்சுளைகளை வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து வெந்தவுடன் நீரை வடித்து விடவும்,
ஒரு பாத்திரத்தில் பலாப்பலத்தை எடுத்து போட்டு மசித்து திரும்பவும் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் வெல்லத்தூள், முன்றாவதாக எடுத்த பால் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
அதனுடன் இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப் பாலை ஊற்றவும்.
பிரதமன் கெட்டியானதும் முதலில் எடுத்த பால், வறுத்த முந்திரிப் பருப்பு, சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி சேர்த்து இறக்கி பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply