பற்களை அழகாக வைத்திருக்க…!

Loading...

பற்களை அழகாக வைத்திருக்க...!பெண்களின் அழகை மெருகேற்றி காட்டுவதில் பற்களுக்குத்தான் முதல் இடம். பற்களில் சிறிது கறை இருந்தாலோ, விரிசல் மற்றும் சொத்தை இருந்தாலோ முக அழகே சிதைந்து போய் விடும்.
ஆகவே பெண்மணிகளே, பற்களை அழகாக வைத்துக் கொள்ள உதவும் உணவு வகையை ருசித்து சாப்பிடுங்கள்.
கடல் வாழ் உணவு வகைகள் மற்றும் டீயிலும் பற்களை மினு மினுக்க வைத்திருக்கக் கூடிய புளூரைடு அதிக அளவில் உள்ளது. இது பல் சொத்தை, பல் வலி, போன்ற பல் சம்பந்தமான பிரச்சினைகளை வர விடாமல் தடுத்து விடுகிறது. இது ஈறுகளை பாதுகாப்பதோடு பலமடையவும் செய்கிறது.
புளூரைடு மிகுதியான உணவை சாப்பிட்டு எந்த இடத்திலும் கூச்சமே இல்லாமல் வாய் விட்டு சிரிக்கலாம். கறை பல் தெரிஞ்சுடக்கூடாதேங்கிற பயமே தேவை இல்லை.
பற்கள் மற்றும் ஈறுகளை பாதுகாப்பதில் இரும்பு சத்தின் பங்கு இன்றியமையாதது. இது நகங்களின் அழகை தக்க வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. ஆட்டுக் கறி, மீன், கோழிக்கறி, முட்டை, உலர்ந்த பழங்கள், பச்சை காய்கறிகள் போன்றவற்றில் இரும்பு சத்து உள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply