பரீட்சிப்புக்கு தயாராகும் கூகுள் பலூன் இணையத் திட்டம்

Loading...

பரீட்சிப்புக்கு தயாராகும் கூகுள் பலூன் இணையத் திட்டம்கூகுள் நிறுவனம் பலூன் மூலம் உலகின் பல பகுதிகளிலும் இணைய சேவையை வழங்கும் திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளமை அறிந்ததே.
இந்நிலையில் Google Project Loon எனும் இத் திட்டம் அடுத்த வருடம் பரீட்சிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இதன்படி இந்தோனேசியாவில் உள்ள Indosat, Telkomsel, XL Axiata எனும் மூன்று இணைய சேவை வழங்குனர்கள் ஊடாக இந்த திட்டம் பரீட்சிக்கப்படவுள்ளது.

தற்போது இந்தோனேசியாவில் மூன்றில் ஒரு பங்கினர் இணைய இணைப்பினை பயன்படுத்திவருவதாகவும், இத் திட்டத்தின் ஊடாக குறித்த விகிதத்தினை அதிகரிக்க
முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சோதனை வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் அதனைத்தொடர்ந்து ஏனைய நாடுகளிலும் குறுகிய காலத்தில் இச்சேவை அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply