பயனுள்ள மருத்துவ குறிப்புகள்

Loading...

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்* இடுப்பு வலியால் அவதியா? முருங்கை இலையைப் பறித்து உப்புச் சேர்த்து அரைத்து சாறு பிழிந்து பிடிப்புள்ள இடத்தில் தடவினால் பிடிப்பு விட்டுவிடும்.
* இஞ்சியை அரைத்து கனமாக பற்றுப் போட்டால் தலைவலி சிறிது நேரத்தில் குணமாகும்.
* தேனி கடித்த இடத்தில் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து போட வலியும் வீக்கமும் பறந்துவிடும்.
* பித்த வெடிப்பிற்கு கடுக்காயைத் தண்ணீர்விட்டு உரசி விழுதை வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் வலியும் வெடிப்பும் மறையும்.
* மூலம், வாயுத்தொல்லை, மாலைக் கண் நோய் உள்ளவர்கள் அடிக்கடி முருங்கைக் கீரை சாப்பிடுவது நல்லது.
* பப்பாளிச் செடியின் பாலை வலிக்கும் பல் மீது தடவிவந்தால் பல்வலி குணமாகும்.
* ஒரு கப் தயிர் தினமும் சாப்பிட்டால் அல்சர் நெருங்காது.
* வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றிலும் குடலிலும் ஏற்படும் புண்கள் ஆறும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply