பட்டாணி ப்ரைட் ரைஸ்

Loading...

பட்டாணி ப்ரைட் ரைஸ்அரிசி – கால் கிலோ
வெங்காயம் – 75 கிராம்
இஞ்சி – 5 கிராம்
பூண்டு – 5 கிராம்
பட்டாணி – 50 கிராம்
ஏலக்காய் – 2
பட்டை – சிறிய துண்டு
இலவங்கம் – 2
எண்ணெய் – 75 மில்லி
பச்சைமிளகாய் – 5 கிராம்
உப்பு – தேவையான அளவு

பட்டாணியை ஊற வைத்துத் தனியாக வேக வைக்க வேண்டும். வெங்காயத்தை மெல்லிய அகலமான துண்டுகளாகவும் பச்சைமிளகாயை நீள வாட்டத்திலும் நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை நன்கு சுத்தமாக கழுவி எடுத்து வைக்கவும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய் போட்டு சிவக்க வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காய சற்று வதங்கியவுடன் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்பு பச்சைமிளகாய் போடவும்.
கழுவி வைத்த அரிசியையும், வேக வைத்த பட்டாணியையும் சேர்த்து ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.
சாதம் பதமாகும் வரை சமைக்க வேண்டும். பதமான பின்பு சில நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து பின்பு எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply