பச்சை பயறு சாதம் | Tamil Serial Today Org

பச்சை பயறு சாதம்

Loading...

பச்சை பயறு சாதம்வேகவைத்த சாதம் – ஒரு கப்
முளைக்கட்டிய பச்சை பயறு – அரை கப்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 3
பூண்டு – ஒன்று
கடுகு – கால் கரண்டி
உப்பு – ஒரு கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து
எண்ணெய் – 3 கரண்டி

பச்சை பயறை அலசி அப்படியே ஒரு நல்ல வெள்ளை துணியில் கட்டி ஒரு நாள் இரவு வைத்திருந்து, மறுநாள் காலையில் எடுத்தால் பயறு முளை விட்டு இருக்கும். இதுவே முளைக்கட்டின பச்சை பயறு.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை அரிந்துக் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கிய பிறகு முளைக் கட்டின பயறையும் அதில் சேர்த்து சற்று வதக்கவும்.
பிறகு சாதம் சேர்த்து மென்மையாக கிளற வேண்டும். உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். 5 நிமிடம் கிளறி இறக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN