பச்சைப்பட்டாணி குஜியா

Loading...

பச்சைப்பட்டாணி குஜியாபச்சைப் பட்டாணி – அரைக் கிலோ
கடுகு – கால் தேக்கரண்டி
எள் – 2 தேக்கரண்டி
சர்க்கரை – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
எலுமிச்சை சாறு – சிறிதளவு
கொத்தமல்லி – 4 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் – 4 மேசைக்கரண்டி
காய்ந்த திராட்சை – 10
பச்சை மிளகாய் – 8
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கோதுமை மாவு – 2 கப்
பொரிப்பதற்கு எண்ணெய் – சிறிது
உப்பு – தேவையான அளவு

பட்டாணியை சிறிது நேரம் ஊற வைத்து, பிறகு தோலுரித்து அரைப்பதமாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒன்றரை மேசைக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் கடுகு தாளித்துப் பெருங்காயம், அரைத்த பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்.
பட்டாணி வெந்தபின் அடுப்பில் இருந்து இறக்கி கோதுமை மாவைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் சேர்த்துக் கிளறவும்.
கோதுமை மாவில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, பூரி அளவிற்கு தேய்த்து நடுவில் பட்டாணிக் கலவையை வைத்து இடைவெளி இல்லாமல் முக்கோண வடிவில் மடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் மிதமான தீயில் வைத்துப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply