நோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை

Loading...

நோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சைஒரு குழந்தை பிறக்கும் போது தொப்புள் கொடியில் இருந்து அறுத்து பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட வேண்டியது தான் ஸ்டெம்செல். வருங்கால மருத்துவ உலகையே ஆட்டிப் படைக்க போகிற இந்த ஸ்டெம்செல் பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் உலகெங்கிலும் நடைபெற்று வருகிறது.

இறந்த உயிரணுக்களை புதிப்பிக்கவும், சேதம் அடைந்த அல்லது பாதிக்கப்பட்ட உடல் பாகங்களை புதிப்பிக்கவும் ஸ்டெம்செல் உதவும். இதனால், இப்போது நாம் குணப்படுத்தவே முடியாது என கூறிவரும் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயை கூட குணப்படுத்திவிடலாம் என ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இன்னும் இதுப்போல மருத்துவ உலகில் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தவுள்ள ஸ்டெம்செல் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் குழந்தையை நல்ல முறையில் பாதுகாக்க நீங்கள் அவர்களது ஸ்டெம்செல்லை பாதுகாப்பது மிக மிக அவசியமாகும். ஸ்டெம்செல்லை கரு மற்றும் வயதடைந்த என இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். ஸ்டெம்செல்லை பயன்படுத்தி க்ளோனிங் செய்ய முடியும் என கூறப்படுகிறது. இதை வைத்து இரண்டு வகையாக க்ளோனிங் செய்ய முடியும்.

குழந்தைபேறு தன்மை குறைவாக உள்ளவர்கள் கருத்தரிக்க உதவ முடியும் மற்றும் இதன் அடுத்த படியாக ஓர் வளர்ந்த ஆளையே உருவாக்கிட முடியும் எனவும் கூறியிருக்கிறார்கள். இரண்டாம் வகையில் வெற்றியடைய இன்றளவிலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உங்கள் உடலில் ஏதாவது திசு சேதமடைந்து இருந்தால், ஸ்டெம்செல் சிகிச்சையினால் அந்த திசுக்களை புதுப்பிக்க முடியும்.

தசை, எலும்பு, நரம்பு மற்றும் இதர உடல் பாகங்கள் அனைத்தும் உருவாக்கிட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். ஒருவரது ஸ்டெம்செல் அவருக்கு மட்டுமல்லாது அவரது உடன் பிறந்தோர் மற்றும் பெற்றோருக்கும் கூட பொருந்த வாய்ப்புகள் இருக்கின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply