நூல்கோல் புட்டு

Loading...

நூல்கோல் புட்டுபெரிய நூல்கோல் – ஒன்று
கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 5
பச்சைமிளகாய் – 10
நல்லெண்ணெய் – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு

வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
நூல்கோலை கழுவி தோல் நீக்கித் துருவி வைத்துக் கொள்ளவும், கடலைப்பருப்பை ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
நூல்கோலையும், கடலைப்பருப்பையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாயை நூல்கோல், பருப்பு இவற்றுடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, தாளித்து கருவேப்பிலை, நூல்கோல் கலவை ஆகியவற்றை போட்டு உப்புப் சேர்த்து சிறு தீயில் வைத்து கிளறவும்.
கலவை உதிர்ந்து பொன்னிறமாக வந்ததும் இறக்கவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply