நீல நிறத்தில் ஒளிரும் புளூட்டோ: புகைப்படத்தை வெளியிட்டது நாசா

Loading...

நீல நிறத்தில் ஒளிரும் புளூட்டோ புகைப்படத்தை வெளியிட்டது நாசாநாம் வாழும் பூமியை போன்றே புளூட்டோவிலும் நீல வானம் மற்றும் உறைந்த பனிக்கட்டி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா, விண்ணில் புளூட்டோ போன்ற கிரகங்களை ஆய்வு செய்ய ‘நியூ ஹாரிசன்’ என்ற விண்கலத்தை கடந்த 2006ம் ஆண்டு அனுப்பியது.

இந்நிலையில் புளூட்டோவில் நீலவானம் மற்றும் உறைந்த பனிக்கட்டி இருப்பது போன்ற புகைப்படத்தை தற்போது எடுத்து அனுப்பியுள்ளது.

இதுகுறித்து இத்திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகள் குழு கூறுகையில், சூரிய குடும்பத்தில் நெப்ட்யூன் கிரகத்திற்கு அப்பால், ஏராளமான வால்நட்சத்திரங்கள், எரிகற்கள், பனிக்கட்டி துகள்கள் உள்ளன.

அப்பகுதியில் உள்ள புளூட்டோ கிரகத்தில் வானம் நீலநிறத்தில் தென்படுவதை முதன் முதலாக படம் எடுத்து அனுப்பியுள்ளது.

பொதுவாக அப்பகுதியில் பனிக்கட்டி துகள்கள், சாம்பல் அல்லது சிவப்பு நிறத்தில் தான் காணப்படும். ஆனால் அவை நீல நிறத்தில் ஒளிர்வது தான் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் புளூட்டோவில் எடுக்கப்பட்ட படங்களில், நீர் உறைந்த நிலையில் காணப்படும் பகுதிகள் செந்நிறத்தில் பிரகாசிக்கின்றன. இதுவும் ஆச்சரியமான விஷயம் தான் என தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply