நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

Loading...

நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!உடலில் அனைத்து பகுதிகளையும் மெது மெதுவாக தாக்கி மரணத்தை ஏற்படுத்துவது நீரிழிவு நோய்.
அதிலும் இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரையானத இருக்கும் போது, இந்த நோயானது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயம் போன்றவற்றையும் பாதிக்கும்.
எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், அசாதாரணமாக இருந்துவிடாமல், உணவில் சற்று கட்டுப்பட்டுடன் இருப்பது நல்லது.
நட்ஸ்
உணவுகளிலேயே நட்ஸ் மிகவும் சிறந்த உணவு. இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன.
அதுமட்டுமின்றி இதில் உள்ள சில கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதைக் கட்டுப்படுத்துகின்றன.

ஆலிவ் ஆயில்
எண்ணெய்களில் ஆலிவ் ஆயில் மிகவும் சிறப்பானது. இத்தகைய ஆலிவ் ஆயிலிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது.
எனவே இந்த எண்ணெயை நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை அதிகமாவதைத் தடுக்கலாம்.

பீன்ஸ்
பீன்ஸில் புரோட்டீன் சொல்லமுடியாத அளவு நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது.

தயிர்
நிறைய பேருக்கு பால் என்றால் பிடிக்காது. எனவே அதற்கு பதிலாக சாப்பிடக்கூடிய சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால் அது தயிர் தான்.
ஏனெனில் பாலுக்கு அடுத்தப்படியாக கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருள் தயிர் தான்.
எனவே தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு தயிரை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை குறைவதோடு, இன்சுலின் அளவும் சரியாக சுரக்கும்.

மீன்
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
அதே சமயம் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் பார்வையில் குறைபாடு இருக்கும்.
எனவே அதனை சரிசெய்ய மீன் சரியாக இருக்கும். இதனால் பார்வை பாதுகாக்கப்படுவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் தடைபடும்.

சிட்ரஸ் பழங்கள்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சில பழங்களான திராட்சை, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அதே சமயம் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, பூசணி வகைகள் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடலாம்.
ஏனெனில் நீரிழிவு நோய் வந்தால், உடலில் அசதி ஏற்படுவதோல், சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள எனர்ஜியை அதிகரிக்கும்.

தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி, இரும்புச் சத்து மற்றம் ஜில்க் என்னும் கொழுப்பும் நிறைந்துள்ளது. அதற்காக தக்காளியை காரமாக சமைத்து சாப்பிடக்கூடாது, அதனை சூப், ரோஸ்ட் என்று செய்து சாப்பிட வேண்டும்.

பெர்ரி பழங்கள்
பழங்களில் பெர்ரிப் பழங்களில் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக இவை நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த அளவு இனிப்பு வகைகளை செய்து கொடுப்பதற்கு சிறந்ததாக இருக்கும்.

பாகற்காய்
பாகற்காய் நன்மைகள் அனைவருக்குமே தெரிந்த விடயம் தான். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
ஏனெனில் இதில் கீரையை விட அதிக அளவில் கால்சியம் சத்துக்களும், இரும்புச்சத்து மற்றும் போதுமான அளவு பீட்டா கரோட்டீனும் உள்ளது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN