நீரில் மிதக்கும் இராட்சத உணவுப் பண்ணை

Loading...

நீரில் மிதக்கும் இராட்சத உணவுப் பண்ணைஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள் நீரில் மிதக்கக்கூடிய இராட்சத உணவுப் பண்ணையை உருவாக்கியுள்ளனர்.
மூன்று தட்டுக்களைக் கொண்ட இப் பண்ணையில் நாளாந்தம் அதிகரித்துவரும் சனத்தொகைக்கு ஏற்றவாறு வருடாந்தம் 10 தொன்கள் வரையான மேலதிக உணவை உற்பத்தி செய்ய முடியும்.

இவற்றில் 1.7 தொன் மீன்களும், 8.1 தொன்கள் மரக்கறி மற்றும் பழ வகைகளும் அடங்கும்.

இங்கு உணவு உற்பத்தி செய்வதற்கு நிலமோ அல்லது தூய நீரோ அவசியம் இல்லை என்பது விஷேட அம்சமாகும்.

அதாவது சூரிய சக்தியின் உதவியுடன் இயக்கப்படும் இப் பண்ணையில் உப்பு அகற்றப்படாத கடல் நீரே நேரடியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் இப் பண்ணையின் அடிப்பகுதி மீன் உற்பத்திக்கு எனவும், மேற்பகுதி மரக்கறி மற்றும் பழவகை உற்பத்திக்கு எனவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப் பண்ணையானது 200 மீற்றர் அகலம், 350 மீற்றர் நீளம் உடையதாக அமைந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply