நண்டு பொரியல்

Loading...

நண்டு பொரியல்நண்டு – 6
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
பொடியாக நறுக்கிய நாட்டுத் தக்காளி – 3
அரைத்த மிளகு – ஒரு தேக்கரண்டி
அரைத்த சீரகம் – அரை தேக்கரண்டி
அரைத்த சோம்பு – ஒரு தேக்கரண்டி
அரைத்த பூண்டு – 8 பல்
அரைத்த இஞ்சி – ஒரு துண்டு
அரைத்த மிளகாய் வற்றல் – 4
புளி சாறு – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி தக்காளி போட்டு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
அதில் மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
புளிச்சாறு உப்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு கலக்கி நண்டை போட்டு நன்றாக கொதி வந்தவுடன் மூடி தீயை குறைத்து வைத்து சுருள சுருள கிண்டவும்.
கொத்தமல்லித் தழை தூவி இறக்கி வைக்கவும். நண்டு வேக வைக்கவும் போது ஓடுகளை தட்டி ஓட்டை செய்து மசாலாவை உள்ளே விடவும் அப்போதுதான் நண்டு உள்ளே மசாலாச் சாறு செல்லும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply