நகங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் நெயில் பாலிஷ் கலவைகள்

Loading...

நகங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் நெயில் பாலிஷ் கலவைகள்பெண்கள் ஸ்டைலாகவும் மற்றும் அழகாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்று விரும்பினால், உடைகள், மேக்கப், முடியின் ஸ்டைல் மற்றும் நகம் என பல விஷயங்கள் கவனித்திட வேண்டும். ஒழுங்காக வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட நகங்களைகொண்டிருக்கும் பெண்கள் அழகாகக் காட்சியளிப்பார்கள். எனவே இன்றைய நாகரீகத்திற்கு ஏற்றவாறு நகங்களை அழகுபடுத்தக் கூடிய சில காம்பினேஷன்களுக்கான டிப்ஸ், இந்த வண்ணக்கலவைகள் நகங்களையும், உங்களையும் அழகுற தோற்றமளிக்க செய்யும் என்பதில் சந்தேகம் வேண்டாம். பெரும்பாலான பெண்கள் தங்களுடைய நகங்களுக்கு பல்வேறு விதமான வர்ணங்களை தீட்டிக்கொள்வதை கண்டிருப்பீர்கள்.

எடுத்துக்காட்டாக, உங்களுடைய நகங்களில் ஒரு நகத்தை கருப்பு நிறத்திலும் மற்றும் பிற நகங்களை வெள்ளை நிறத்திலும் வர்ணம் அடித்திருப்பதை சொல்லலாம். இன்றைய நாட்களில் பெரிதும் விரும்பப்படும் வண்ணக் கலவையாக இது உள்ளது. டாட்ஸ் மற்றும் ஸ்ட்ரைப்ஸ்(கோடுகள்) போன்ற வடிவமைப்புகளிலும் உங்களுடைய நகங்களுக்கு வண்ணங்களை தீட்ட முடியும். இந்த புதிய முயற்சிகளை ஒரு முறை பரிட்சிக்க நினைத்தால், இங்கே தரப்பட்டுள்ளவற்றைப் பயன்படுத்தி அழகு பெறுங்கள்.

கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு :

பெண்மைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் இந்த வண்ணங்கள் இரண்டும் ஒன்றாக காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஒரு நகத்தை கருப்பு நிறத்தில் விட்டு, விட்டு பிற நகங்களை இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டினால் அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இந்த வண்ணக்கலவை பல்வேறு உடைகளுக்கும் ஏற்றதாகவும், பளிச்சிடும் நிறம் கொண்டதாகவும் இருக்கும். ஒவ்வொரு நாளும், தங்களுக்கு பிடித்தமான ஸ்டலை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பையும் மற்றும் மிடுக்காகவும் தோற்றமளிக்கவும் செய்யும்.

கருப்பு மற்றும் வெள்ளை :

இந்த வண்ணக்கலவை பயன்படுத்தும் போது, 8 வெள்ளை நிற நகங்கள் மற்றும் 2 கருப்பு நிற நகங்களை கொண்டிருப்பீர்கள். கருப்பும், வெள்ளையும் உன்னதமான வண்ணங்களாக கருதப்படுவதால், இந்த வண்ணக்கலவைகள் தீட்டப்பட்ட நகங்களுடன் நீங்கள் அலுலவகத்திற்கும் சென்று வரலாம்.

கடல் நீலம் மற்றும் சில்வர் :

உங்களுடைய நகங்களின் பளபளப்பில் சற்றே மாற்றத்தைக் காட்ட விரும்பினால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய வண்ணம் சில்வர் ஆகும். எனினும், இந்த வண்ணத்தை தேவைக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். நல்லதொரு விளைவை ஏற்படுத்த விரும்பினால், இரண்டு சில்வர் நகங்களை கொண்டிருந்தால் கூட போதுமானது.

ஊதா மற்றும் இளஞ்சிவப்பு :

ஊதா மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்கள் நகங்களில் தீட்டப் போகிறோம் என்று நீங்கள் முடிவெடுக்கும் போது, இது சற்றே குழந்தைத்தனமாக இருப்பதாக உங்களுக்கு தோன்றும். எனவே நிறமாலையில் உள்ளதைப் போலவே இந்த வண்ணங்களை நீங்கள் அளவாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் பிரெஞ்சு முறையில் அலங்காரம் செய்து கொள்ள விரும்பினால், ஊதா மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்கள் மிகவும் எளிமையாகவும் மற்றும் புத்துணர்வுடனும் உங்களை காட்டும்.

மெரூன் மற்றும் சாம்பல் நிறம் :

மெரூன் மற்றும் சாம்பல் நிறங்களை பயன்படுத்தி நகங்களை அழகுபடுத்தினால், அவை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். மோதிர விரல் தவிர பிற அனைத்து நகங்களுக்கும் சாம்பல் நிறத்தை தீட்டுங்கள் அல்லது இதற்கு மாறாக மெரூன் நிறத்தை தீட்டுங்கள். மீதமுள்ள நகரத்திற்கு மற்ற வண்ணத்தை தீட்டுங்கள் அழகைப் பெற்றிடுங்கள்.

நீலப்பச்சை மற்றும் மஞ்சள் :

நகங்களை சில கோடுகள் அல்லது பூக்களைத் தீட்டி அழகுபடுத்தலாம். நகத்தின் அனைத்து இடங்களிலும் மஞ்சள் மற்றும் நீலப்பச்சை நிறத்தை தீட்டி விட வேண்டும். சில மேக்கப் சாதனங்கள் மற்றும் நகை களைக் கொண்டே எதிர்பார்க்கும் ஸ்டைலை பெற்று விட முடியும்.

ஆரஞ்சு -இளஞ்சிவப்பு :

நம்மில் பலருக்கும் கோடைக்காலம், நேர்மறையான எண்ணங்கள் மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் வண்ணமாக ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்கள் உள்ளன. இதன் காரணமாகவே உங்களுடைய மனம் இலேசாக உள்ளதைக் காட்டும் வகையில் கதகதப்பான பருவங்களில் இந்த வண்ணக்கலவைகள் தேர்ந்தெடுக்க வேண்டும். நிறமாலையில் ஒரே மாதிரியான தோற்றமளித்தாலும், இந்த வண்ணங்கள் மென்மையாக கலந்து கொண்டு, உங்களுடைய நகங்களுக்கு புத்துணர்வு மிக்க பளபளப்பை கொடுப்பதால், இந்த வண்ணக்கலவையுடைய நகங்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அது மட்டுமல்லாமல் கோடைகாலங்களில் உங்களுடைய உடைகளுக்கு ஏற்ற வகையில் நகங்களை அலங்காரம் செய்வதும் நல்லதாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply