தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிக்கலாமா?

Loading...

தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிக்கலாமாஎண்ணெய்களை கொண்டு வாய் கொப்பளித்தால் நுண்ணுயிரிகள் வெளியேறி வாய் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

இதுவரை நல்லெண்ணெய்யில் மட்டுமே வாய் கொப்பளித்து வந்தோம், ஆனால் தேங்காய் எண்ணெயிலும் வாய் கொப்பளிக்கலாம். தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் நீங்கும்.

ஈறுகளில் இரத்தக்கசிவு பிரச்சனையை சரிசெய்யும்.

பற்களில் ஏதேனும் கறை இருந்தால் தேங்காய் எண்ணெயால் வாய்கொப்பளிப்பதன் மூலம் பற்கள் வெண்மையாகும்.

டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் ஆரோக்கியத்துடனும், பிரகாசமாகவும் இருக்கும்.

தலைவலியிலிருந்து மற்றும் சுவாசப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

செய்யும் முறை

சுத்தமான தேங்காய் எண்ணெய்யை 10 மி.லி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். தினமும் இதை செய்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply