தேங்காய்ச் சாதம்

Loading...

தேங்காய்ச் சாதம்பச்சரிசி – ஒரு கப்
தண்ணீர் – இரண்டரை கப்
பெரிய தேங்காய் – 1 மூடி
மிளகாய் வற்றல் – 4
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 15
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – ஒன்றரைத் தேக்கரண்டி

சாதத்தை குழைய விடாமல் பொல பொலவென்று வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
தேங்காயைத் துருவி வெறும் வாணலியில் போட்டு லேசாக சிவக்கும் வண்ணம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய்யும் நெய்யும் விட்டு, கடுகு போட்டு வெடித்தவுடன் உளுத்தம்பருப்பு, முந்திரிப்பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு வறுக்கவும்.
நன்றாக வறுபட்டவுடன், உப்புப் பொடியையும், வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலையும் போட்டு ஒருமுறை புரட்டி பின்பு சாதத்தில் கொட்டி நன்றாய் கலந்து விடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply