தினையரிசி கீரை அடை

Loading...

தினையரிசி கீரை அடைதினையரிசி – 3/4 டம்ளர்
கடலைப்பருப்பு – கால் டம்ளர்
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
முருங்கைக்கீரை – அரை கப்
பல்லாரி – ஒன்று
சீரகம் – கால் தேக்கரண்டி
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி – அரை தேக்கரண்டி
காயம் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தினையரிசி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

அதில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

முருங்கைக்கீரை, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊற வைத்த பருப்பு வகைகளை மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் கீரையை லேசாக வதக்கி எடுக்கவும்.

அரைத்து வைத்திருக்கும் மாவுடன் மஞ்சள் பொடி, காயம், உப்பு, மிளகாய் பொடி, சீரகம் மற்றும் வதக்கிய கீரை வெங்காயத்தை சேர்க்கவும்.

எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து உப்பு சரிப் பார்த்து வைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அடையாக ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.

முறுகலான அடையை வெண்ணெய், வெல்லம் வைத்து சூடாகப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply