தாளித்த கொழுக்கட்டை

Loading...

தாளித்த கொழுக்கட்டைபச்சரிசி மாவு – ஒரு கப்
தேங்காய்த்துருவல் – 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 7
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தாளிக்கும் அளவிற்கு
கறிவேப்பிலை – சிறிது

பச்சரிசி மாவில் தேவையான உப்பு போட்டு சூடான தண்ணீர் விட்டு கால் தேக்கரண்டி எண்ணெய்யும் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிற்கு இந்த மாவினை சிறுசிறு உருண்டைகளாய் உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை வட்டமாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி வேக வைத்த கொழுக்கட்டைகளையும் போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் நன்றாகச் சுருள வதங்கும் வரை வதக்கவும்.
பிறகு, தேங்காய் துருவலைப் போட்டு, கிளறி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply