தலை முடி கொட்டுகிறதா?

Loading...

தலை முடி கொட்டுகிறதாஉலகின் பல்வேறு நாடுகளில் கருஞ்சீரகமும் அதன் எண்ணெய்யும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதிலிருந்து கருஞ்சீரகத்தின் மருத்துவப் பயன்களை எவராலும் மறுக்க முடியாது என்பதை உணர முடிகிறது.

மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கக் கூடிய ஆற்றல் பராகா (கருஞ்சீரக) எண்ணெய்க்கு உண்டு. பராகா எண்ணெய்யை அரை டீஸ்பூன் எடுத்து அதே அளவுள்ள தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ முடியும். டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

உடலுக்கு நோய் வந்துவிட்டால், நோயைக் கட்டுப்படுத்த பராகா (கருஞ்சீரக எண்ணெய்) மிகவும் உதவும், நோய்க்கு ஏற்றாற்போல் வெந்நீர், பால், பழச்சாறு ஆகியவற்றுடன் இந்த எண்ணெய்யை கலந்து சாப்பிட்டால் நோய் கட்டுக்குள் வந்துவிடும். இந்த எண்ணெய்யை ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

பெண்களே – தலை முடி கொட்டுகிறதா? : பெண்களைப் பொருத்தவரை தலைமுடி கொட்டுவது என்பது மிகப் பெரிய பிரச்சினை. ஆண்களைப் பொருத்தவரை இளவயது நரை மிகப் பெரிய பிரச்சினை. இரண்டுக்கும் பராகா எண்ணெய் உதவும். எலுமிச்சை சாற்றை தலை முழுவதும் (முடியின் வேர்க்கால்களில்) நன்றாகத் தேய்த்து 15 நிமிஷம் காத்திருங்கள். முடி நன்றாக உலர்ந்துவிடும். பின்னர் ஷாம்பூ போட்டுக் குளிக்க வேண்டும். குளித்து முடித்தவுடன் தலையை ஈரப்பதமின்றி நன்றாகத் துடைத்து விடுங்கள். பின்னர் முடியின் வேர்க்கால்கள் முழுவதும் பரவும் அளவுக்கு பராக்கா எண்ணெய்யை நன்றாகத் தேயுங்கள். இவ்வாறு தொடர்ந்து ஆறு மாதம் செய்தால், நீங்கள்தான் முடிசூடா மன்னர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply