தனது முதலாவது Android One கைப்பேசியினை அறிமுகம் செய்தது கூகுள்

Loading...

தனது முதலாவது Android One கைப்பேசியினை அறிமுகம் செய்தது கூகுள்கூகுள் நிறுவனம் Android One எனும் மொபைல் சாதனத்தை வடிவமைத்து வந்தமை அறிந்ததே.
இந்நிலையில் இச் சாதனத்தினை முதன் முறையாக ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கலில் அறிமுகம் செய்துள்ளது.

Aquaris A4.5 எனப்படும் இக் கைப்பேசியானது 4.5 அங்குல அளவு, 540 x 960 Pixel Resolution உடைய IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் இதில் 1GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய MediaTek MT6735M Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, 16GB சேமிப்பு நினைவகம், 8 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பன தரப்பட்டுள்ளன.

கூகுள் பிளே மியூசிக்கினை 3 மாதங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தக்கூடியதாக விற்பனை செய்யப்படுகின்றது.

இதன் விலையானது ஸ்பெயினில் 169.90 பவுண்ட்ஸ் ஆகவும், போர்த்துக்கலில் 179.90 பவுண்ட்ஸ்களாகவும் காணப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply