தந்தூரி காலிஃப்ளவர் பக்கோடா

Loading...

தந்தூரி காலிஃப்ளவர் பக்கோடாபெரிய காலிஃப்ளவர் நறுக்கிய – ஒன்று
முட்டை – 4
கடலை மாவு – 100 கிராம்
சிக்கன் 65 பவுடர் – 100 கிராம்
மஞ்சள் பொடி – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு

முதலில் பாத்திரத்தில் காலிஃப்ளவர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். 5 நிமிடம் வெந்தப்பிறகு வடிகட்டி வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடிக்கவும். அதில் கடலைமாவு, சிக்கன் 65 பவுடர் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கலக்கவும்.
கலக்கி வைத்த கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரை போட்டு கிளறி வைக்கவும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் காலிஃப்ளவர் கலவையை சிறிது சிறிதாக போட்டு எடுக்கவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply