தக்காளி கோழி

Loading...

தக்காளி கோழிகோழி – ஒன்று
தக்காளி – அரைக் கிலோ
வெங்காயம் – கால் கிலோ
மிளகாய் வற்றல் – 6
இஞ்சி – ஒரு அங்குலத்துண்டு
பூண்டு – 3 பல்
கிராம்பு – 3
பட்டை – சிறுதுண்டு
நெய் – 3 மேசைக்கரண்டி
வினிகர் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

கோழி இறைச்சியினை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கின தக்காளியுடன், கால் பாகம் நறுக்கின வெங்காயம் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்கு வெந்தவுடன் இரண்டையும் கரைத்து, வடிக்கட்டி, தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை ஆகியவற்றை வினிகர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு சூடேறியதும், மீதமுள்ள நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கி தனியே எடுத்து விடவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு இலேசாக வதக்கி அதன்பின் கோழி இறைச்சி, வறுத்து எடுத்து வைத்துள்ள வெங்காயம், உப்பு, சிறிது வினிகர் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து வேகவிடவும்.
இறைச்சி பாதி வெந்தவுடன் வேக வைத்து, கரைத்து வைத்துள்ள தக்காளி, வெங்காய சாற்றினை ஊற்றி வேகவிடவும்.
இறைச்சி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி சூடாக பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply