டைமன் கட்

Loading...

டைமன் கட்மைதா மாவு – 2 கப்
முட்டை – 1
சர்க்கரை – 2 கப்
பால் – 2 மேசைக்கரண்டி
பேக்கிங் சோடா – அரைத் தேக்கரண்டி

மைதாமாவை சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை பொடித்து மைதாமாவில் சேர்க்கவும். இதனுடன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடித்து வைத்து இருக்கும் முட்டை மற்றும் பால் இவற்றை மாவில் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
நன்கு பிழிந்த ஈரத்துணியை மாவின் மீது போர்த்தி அரை மணிநேரம் ஊறவிடவும்.
ஊறியபின்பு எல்லா மாவையும் எடுத்து உருட்டி, சப்பாத்தி குழவியால் நல்ல கனமான, அரை அங்குல உயரம் உள்ள சப்பாத்தி போல் வட்ட வடிவத்திற்கு தேய்த்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கத்தியைக் கொண்டு முதலில் நீளவாக்கிலும், பின்பு குறுக்கே முக்கோணமாய் வெட்ட டைமண்ட் வடிவ துண்டுகள் கிடைக்கும்.
இந்த டைமண்ட் துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply