ஞாபக மறதியை தடுக்க முடியுமா?

Loading...

ஞாபக மறதியை தடுக்க முடியுமாஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும் வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே அபூர்வமாகவே இந்தப் பாதிப்பு ஏற்படும்.

மூளைக்கு ரத்தஓட்டம் குறைவதால் ஏற்படும் மறதி vascular dementia. இவை அல்லாமல் சிறுமூளைப் பாதிப்பு, மூளைக் காயம், multiple sclerosis என்ற மூளை அழற்சி, மூளைக் கட்டிகள், அதிக மது அருந்துதல், ரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கால்சியம் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள், மிகக் குறைந்த வைட்டமின் பி12 அளவு, மூளையில் நீர்த்தேக்கம் ஏற்படுதல், ஒரு சில மருந்துகள் குறிப்பாகக் கொழுப்பைக் குறைக்கிற மருந்துகள் ஆகியவற்றாலும் மறதி ஏற்படலாம்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், மூளை பரிசோதனை, ரத்தக் குறைவு உள்ளதா, சோக நிலை உள்ளதா, தைராய்டு அளவு, வைட்டமின் சத்து எவ்வாறு உள்ளது போன்றவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.

ஆரம்பநிலை அறிகுறிகள்

1. மொழித் திறனில் தடுமாற்றம்

2. ஞாபகக் குறைவு, குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள்

3. நேரம், காலத்தைப் பாகுபடுத்த இயலாமை

4. எப்போதும் செல்லும் பாதையை மறப்பது

5. முடிவு எடுப்பதில் சிரமம்

6. ஒரு செயலைச் செய்ய ஆர்வம் இல்லாமை

7. சோகம், கோப உணர்ச்சிகளை அதிகப்படியாக வெளிப்படுத்துதல்

8. பொழுதுபோக்கு, தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல்

நினைவாற்றல் அதிகரிக்கக் கைமருந்துகள் :

* 10 பாதாம் பருப்பை ஊறவைத்து இரவு சாப்பிட வேண்டும். காலையில் என்றால் 4 – 5 உட்கொள்ளலாம்.

* வெண்டைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயைப் பச்சையாகச் சாப்பிடலாம்.

* ஒரு கப் எலுமிச்சை சாற்றில் மூன்று கிராம் வால்மிளகு சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

* வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி, மிளகு சேர்த்துச் சட்னி போல சாப்பிடலாம்.

* தினமும் 5 துளசியிலைகளைச் சாப்பிடலாம்.

* 5 கிராம் அதிமதுரச் சூரணத்தை நெய்யில் குழைத்துக் காலை, மாலை சாப்பிடலாம்.

* உணவில் சிறிது நெய் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது. வல்லாரை நெய், சாரஸ்வதாரிஷ்டம், கூஸ்மாண்ட கிருதம் போன்றவையும் சிறந்தவை.

* அஸ்வகந்தா சூரணத்தை 10 கிராம் எடுத்து இரவில் பாலில் கலந்து சாப்பிடலாம்.

* புதினா கீரையைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* தினமும் 4 நெல்லிக்காய் சாப்பிடலாம்.

* பாலுடன் சங்குப்பூவின் வேர் 3 கிராம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply