ஜாலர் இடியாப்பம்

Loading...

ஜாலர் இடியாப்பம்மைதா – 300 கிராம்
தேங்காய்ப்பால் அல்லது பசும்பால் – ஒரு கப்
உப்பு – ஒரு சிட்டிகை

மாவைச் சலித்து உப்பு சேர்த்து தேங்காய்ப் பாலைக் கலக்கவும். ரவை தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
பிறகு மாவை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டாவிடில் இடியாப்ப அச்சில் உள்ள துவாரம் அடைத்துக் கொள்ளும்.
வாணலியில் தவா அல்லது குழிவு அதிகம் இல்லாத ஒரு இருப்பு சட்டியை வைத்து, நெய் தடவி சூடேற்றவும்.
ஒரு கரண்டி மாவை ஜாலர் அச்சில் எடுத்து கொண்டு, சூடான இரும்புச் சட்டியில் இடியாப்ப வடிவில் மாவை ஊற்றவும்.
நாம் கையை சுற்றி சுற்றி ஆட்டினால் இடியாப்ப வடிவில் தானே விழுந்து விடும். 2 நிமிடத்தில் வெந்து விடும்.
இதனை தேங்காய் பால் அல்லது குருமாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply