சைகைகளை எழுத்துருக்களாகவும், ஒலி வடிவமாகவும் மாற்றும் கையுறை

Loading...

சைகைகளை எழுத்துருக்களாகவும், ஒலி வடிவமாகவும் மாற்றும் கையுறைகை அசைவுகளை அல்லது சைகைகளை எழுத்துருக்களாகவும், ஒலி வடிவமாகவும் மாற்றக்கூடிய அதிநவீன இலத்திரனியல் கையுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகக் கலைஞரான Hadeel Ayoub என்பவர் உருவாக்கியுள்ளார்.

ஐந்து சென்சார்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இக் கையுறையானது மெல்லியதாகவும், பாரம் குறைந்ததாகவும், விரைவாகச் செயற்படக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் இதனை Wi-F- இணைப்பின் ஊடாக ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்கள் என்பவற்றுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

இதன் விலையானது 386 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN