சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

Loading...

சேப்பங்கிழங்கு ரோஸ்ட்சேப்பங்கிழங்கு – அரை கிலோ
நல்லெண்ணை – 150 கிராம்
கடுகு – ஒரு தேக்கரண்டி
கெட்டியாக கரைத்த புளிக் கரைசல் – ஒரு தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி – அரை தேக்கரண்டி

குக்கரில் தண்ணீர் விட்டு சேப்பங்கிழங்கை போட்டு குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த கிழங்கை தோலை உரித்து நீளவாட்டில் 4 அல்லது 6 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு கனமான வாணலியில் நல்லெண்ணையை விட்டு காய்ந்தவுடன் கடுகைப் போட்டு வெடித்ததும் சேப்பங்கிழங்கு துண்டங்களை அதில் போடவும்.
புளிகரைசலை அதில் விட்டு நன்றாகக் கிளறவும். அடிக்கடி மெல்லிய தோசை திருப்பியினால் உடையாமல் கிளறி விடவும்.
காய் முன்பே வெந்ததால் சீக்கரமாக கரகரப்பாக ஆகிவிடும். அப்பொழுது அடுப்பை அனைத்து விட்டு மிளகாய்ப் பொடியும், உப்புப் பொடியும் போட்டு நன்றாகக் கிளறி விட்டு அப்படியே வைத்து விடவும்.
அடுப்பு சூட்டிலேயே மிளகாய்ப் பொடி பொரிந்து உப்புடன் சேர்ந்து காயில் ஒட்டிக் கொள்ளும். இது நிறைய நேரம் கரகரப்பாகவே இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply